Virusகளை தடுப்பதில் Internet explorer 10 முதலிடம்

கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களை தடுத்து, பாதுகாப்பான இணைய தேடலில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 முதல் இடத்தை பிடித்துள்ளது.
என்.எஸ்.எஸ். லேப்ஸ்(NSS Labs) என்னும் ஆய்வு அமைப்பு மேற்கொண்ட சோதனையில் இந்த விபரம் தெரிய வந்துள்ளது.
700 வகையான மால்வேர் புரோகிராம்களைக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது.

28 நாட்களாக குரோம், பயர்பொக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஓபரா மற்றும் சபாரி பிரவுசர்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன.
இவற்றில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் 99 சதவிகித மால்வேர்களைத் தடுத்தது கண்டறியப்பட்டது.
இரண்டாவது இடத்தைப் பிடித்த குரோம் பிரவுசர் 83 சதவிகித மால்வேர் புரோகிராம்களையே தடுக்க முடிந்தது.
சபாரி மற்றும் பயர்பொக்ஸ் பிரவுசர்கள் 10 சதவிகித மால்வேர்களையும், ஓபராவின் புதிய பதிப்பு 2 சதவிகித மால்வேர்களையும் தடுத்தது.
இந்த ஆய்வின் முடிவில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 10 அதிகளவான மால்வேர்களை தடுத்து முதலிடம் பிடித்தது.
இதற்கு காரணம் இவை கேம்ப் (CAMP (content agnostic malware protection) என்னும் தொழில் நுட்பத்தினைக் கையாள்கின்றன.
இந்த தொழில் நுட்பத்தின் மூலம் தரவிறக்கம் செய்யப்படும் மூல தளத்தின் நம்பகத்தன்மை முதலில் சோதனை செய்யப்படுகிறது.
இதன் பின்னர் கணனியில் நிறுவுவதற்கு முன்பு, குறிப்பிட்ட பைல் அல்லது புரோகிராம் சோதனைக்கு உள்ளாகிறது.
மால்வேர் இருப்பதாகச் சோதனையில் தெரிய வந்தால், உடனே எச்சரிக்கை கொடுக்கப்பட்டு தொடர்ந்து செயல்படுத்துவது தடுக்கப்படுகிறது.
கூகுளைப் பொறுத்தவரை குரோம் உலாவியில் Safe Browsing API v2 என்ற தொழில் நுட்பமும் கூடுதலாகப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3