Password களை மாத்திரைகளாக்கும் புதிய முயற்சி

இன்றைய இலத்திரனியல் உலகில் பல்வேறு தேவைகளுக்கு நாம் கடவுச் சொற்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.சில இலத்திரனியல் சாதனங்களை செயற்படுத்த கடவுச்
சொற்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது.
கடவுச் சொற்களை நினைவு வைத்திருப்பதனைப் போன்றே, நூதன கடவுச் சொல் திருடர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் சவால்களும் நமக்குக் காணப்படுகின்றது.
இந்த சவால்களை வெற்றிகொள்ளும் நோக்கில் மோட்டரோலா நிறுவனம் புதிய தொழில்நுட்பமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
கடவுச் சொல்லை நாம் மாத்திரையாக விழுங்க முடியும், இந்த மாத்திரைக்கு மின்சார சக்தி அவசியமில்லை.எமது வயிற்றின் அமிலங்களின் மூலம் மாத்திரைக்கு தேவையான இயங்கு சக்தி கிடைக்கின்றது.
கடவுச் சொல்லை தட்டச்சு செய்யாமல் விழுங்கிய மாத்திரையை இலத்திரனியல் சாதனங்கள் அடையாளம் கண்டு செயற்படக் கூடிய தொழில்நுடபம் அறிமுகம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும், உடலில் இலத்திரனியல் டிஜிட்டல் பச்சை ஒன்றை குத்துவதன் மூலமும் கடவுச் சொல்லினால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது,
இந்த இரண்டு முறைமைகளையும் வெற்றிகரமாக அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை மோட்டரோலா நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem