Facebook – எரிச்சலூட்டும் தொல்லைகளும் தீர்வுகளும்.


பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பதென்பது ஒரு சுவாரசியமான அனுபவம்தான், ஆனாலும் பேஸ்புக்கில் உள்ள சில சில வேண்டாத வசதிகள் பலவேளைகளில் எமக்கு தலையிடியையே தருகின்றன.
சோ, பேஸ்புக்கில இருக்கிற சில பல இம்சைகளிலிருந்து எப்படி விடுபடலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பெரும்பாலானோருக்கு தெரிந்த விடயங்கள்தான் இருப்பினும் ஏனையவர்களுக்காக அவற்றை இங்கே பார்த்துவிடலாம்.
1.TAG தொல்லையிலிருந்து விடுபடுவது எப்படி?
ஆஹா இந்த Tag பண்ணுற பயபுள்ளக இருக்கிறாங்களே, இவங்க தொல்லை தாங்கவே முடியாது. அந்த போட்டோ இந்த போட்டோ என என்னென்றே பார்க்காமால் கேட்காம எங்க வீட்டுக்குள்ள போறமாதிரியே (Wall)எங்க பக்கத்துக்கும் Tag பண்ணிடுவாங்கள். சோ இதிலிருந்து தப்பிக்க
*Account Settings –>>>> Timeline and Tagging –>>>> வழியே Who can add things to my timeline? பகுதிக்கு சென்று ”Review posts friends tag you in before they appear on your timeline?” என்ற வசதியை ON/Enabled செய்திடுங்கள்.
இதன் பிற்பாடு எவரேனும் உங்களுக்கு Tag செய்யும் போது அவை நேரடியாக உங்கள் பக்கத்தில் வராது. மாறாக Activity Log பகுதிக்கு சென்று Add to Timeline என்பதை தெரிவுசெய்தால் மட்டுமே அவை உங்கள் பக்கத்தில் தெரியும்.
2.உங்கள் (Wall)பக்கத்தில் ஏனையோர் Post செய்வதை தடுக்க.
*Account Settings –>>>> Timeline and Tagging –>>>> வழியே Who can add things to my timeline? பகுதிக்கு சென்று ”Who can post on your timeline?” என்பதில் Only Me என்பதை தெரிவு செய்யுங்கள்.
மறக்காமல் பர்த்டே(Birth Day) வரும் போது இந்த செட்டிங்கை மாத்திவிடுங்கள். நண்பர்கள் வாழ்த்து சொல்லி போஸ்ட் பண்ணனும்ல. :)
3.Game/App/Event  Requests அனுப்புபவர்களுக்கு ஆப்பு.
அடுத்தது பேஸ்புக்கில் நடைபெறும் பாரிய கொலை முயற்சி கதறக் கதறக் கேம் றிக்குவஸ்ட் அனுப்புவது. ஐந்து வயதுப் பையனோட கேம்ஸ் எல்லாம் விளையாடுறது போதாதென்று நண்பர்கள் பட்டியலில் இருக்குறவனுகளையும் இந்தமாதிரி பயபுள்ளக விடமாட்டாங்க. இப்பிடி எதாவது நம்மளுக்கு அடிக்கடி வர நாங்களும் எங்க ஸ்டேட்டஸ்சிற்குதான் எவனோ கமென்ட் அடிக்கிறான் என நினைத்து பாய்ஞ்சடிச்சு போனா அது  இவனுகளோட கேம் றிக்குவஸ்ட்டாக இருக்கும். எப்பிடி இருக்கும் அந்த தேரம்…
பாருங்கள் இந்த ஜீவனின் தன்னலமற்ற சேவையை
இந்த பிரச்சினையை இல்லாமல் செய்ய வேண்டுமானால்,
Account Settings –> Blocking பகுதிக்கு செல்லுங்கள் அங்கே Block users, Block app invites, Block event invites, Block apps என்றமாதிரியாக இருக்கும்.
உதாரணத்திற்கு ஒரு நண்பர் அதிக அதிகமாக கேம் றிக்குவஸ்ட் அனுப்பி உங்களை வெறுப்பேத்துகிறார் என்றால், Block app invites பகுதிக்கு சென்று Block invites from என்ற பெட்டியில் அந்த நண்பரின் பெயரை சேர்த்துவிடுங்கள். அவ்வளவுதான் இனிமேல் குறித்த நண்பர்  அனுப்பும் கேம் றிக்குவஸ்ட்கள் உங்களுக்கு வராது. கூடவே App/Event  Requests என்பவற்றை தடைசெய்யவும் இதேமுறைதான்.
4.குறிப்பிட்ட நபருக்கு மட்டும் OFF LINE கொடுப்பது எப்படி?
அப்பப்ப சிக்குற சில பிகருகளோட கடலை போடலாம்னு சாட் திறந்தா, அந்த நேரம் பார்த்தே வருவானுகள் நம்மட நட்புகள் சிலபேர் எங்க நிம்மதியா சாட் பண்ணவே விடமாட்டாங்களா.
குறிப்பிட்ட ஒரு நபருக்கு மட்டும் Off Line  கொடுக்க சாட் பாக்ஸ்சின் செட்டிங் ஐகானை அழுத்தி Turn off Chat for ——என்பதை தெரிவு செய்யுங்கள் அவ்வளவுதான்.
5.ஈமெயிலுக்கு செல்லும் Notificationகளை தடுப்பது எப்படி?
பேஸ்புக்கில் கணக்கு ஆரம்பிக்கும் போது பிரத்தியேக மெயிலையே அதில் பயன்படுத்தியிருப்போம், பிற்பாடு வேறு முகவரியை இணைக்க கூடியதாக இருந்தாலும் அசதியில் பலர் தொடர்ந்து அந்த முகவரியையே பாவிப்போம். பிரச்சனை என்னவென்றால் பேஸ்புக்கிற்கு வரும் Notification அனைத்தும் தவறாமல் மெயிலுக்கும் வரும். இதனால் வீணாக மெயில் இன்பாக்ஸ் குப்பையாகுமே தவிர வேறெதுவுமில்லை.
இதனை தடுக்க Account Settings –>> Notification வழியே How You Get Notifications பகுதிக்கு சென்று Email என்பதை தெரிவுசெய்யுங்கள். அங்கே இரண்டு தெரிவுகள் இருக்கும் அதில் இரண்டாவதாக உள்ளதை தெரிவு செய்யுங்கள். இனிமேல் உங்கள் அக்கவுன்ட் பற்றிய சில முக்கிய ஈமெயில்கள் தவிர வேறெதும் உங்கள் ஈமெயில் முகவரிக்கு வந்து தொல்லை தராது.
ஆரம்பத்திலயே சொல்லியிருந்தேன், பேஸ்புக்ல இருக்கிறது ஒரு வித்தியாசமான அனுபவம் என்று ஆனாலும் இந்த மாதிரி இன்னும் பல ஆனந்த தொல்லைகள்:p நிறையவே பேஸ்புக்ல இருக்கு. மேலதிகமாக ஏதாவது கேட்க விரும்பினால் கீழே கமென்ட் பாக்ஸில் தாராளமாக கேட்கலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு