விலை குறைந்த ஸ்மார்ட் கைப்பேசி தயாரிக்கும் Motorola
Motorola நிறுவனமானது சில மாதங்களுக்கு முன்னர் 179 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான Moto G எனும் விலை குறைந்த ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.
இந்நிலையில் தற்போது 50 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை Motorola நிறுவனத்தின் தலைமைத் தகவல் அதிகாரி Dennis Woodside நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தார்.