இனிமேல் கூகுளும், சாம்சங்கு

இணையதளத்தின் ஜாம்பவான் கூகுளுக்கும், மொபைல் உலகின் ஜாம்பவான் சாம்சங்கிற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையின் பெருநிறுவனங்களான சாம்சங்கும், கூகுளும் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன.

அதாவது, அறிவுசார் தொழில்நுட்ப சொத்துகளின் மீது இரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வளர்க்கும் பொருட்டும், செலவுமிகுந்த சட்ட மோதல்களின் அபாயத்தைக் குறைக்கும் வகையிலும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது அடுத்த பத்தாண்டுகளில் பெறவிருக்கும் காப்புரிமைகள் மீதும், தற்போது நடைமுறையில் உள்ள காப்புரிமைகள் மீதும் செல்லுபடியாகும் என்று சாம்சங் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இந்த ஒப்பந்தம் குறித்த நிதி விதிமுறைகள் அறிக்கைகளில் வெளியிடப்படவில்லை.
இரு நிறுவனங்களுக்கிடையேயான இந்த உடன்பாடு சட்டரீதியான மோதல்களைக் குறைத்து கண்டுபிடிப்புகள் மீதான கவனத்தை அதிகரிக்கும் என்று கூகுள் நிறுவனத்தின் துணை பொது வழக்கறிஞரான ஆலன் லோ தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் போன்கள் மற்றும் தொலைக்காட்சிகள் தயாரிப்பில் ஏற்கனவே இந்த இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3