சாதனைப் பயணத்தில் அப்பிளின் iOS 7
அப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மற்றும் ஐபோன்களுக்காக iOS 7 இயங்குதளத்தினை கடந்த வருட இறுதி மாதங்களில் அறிமுகம் செய்திருந்தது.
பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் முன்னைய பதிப்பில் காணப்பட்ட தவறுகள் நீங்கலாக அறிமுகமான இப்புதிய இயங்குதளம் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப்
பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது 78 சதவிகிதமான அப்பிள் சாதனங்களில் iOS 7 இயங்குதளம் பயன்படுத்தப்படுவதாக அப்பிள் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
18 சதவிகிதமான சாதனங்களில் iOS 6 பயன்படுத்தப்படுவதாகவும் அத்தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.