மின்னஞ்சல் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா?

மின்னஞ்சல் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
ஒன்று மின்னஞ்சலை உபயோகிப்பவரது (Username) பெயரின் அடையாளம். மற்றொன்று அந்த மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, பயன்படுத்த தருபவரது பெயரின் (Domainname) அடையாளம்.
Username மற்றும் Domainname
ஆகியவற்றைப் பிரிக்கப் பயன்படுவதே @ என்ற குறியீடாகும்.
உதாரணமாக ஒருவரின் முகவரி Raja@yahoo.com என்று அமைந்திருக்குமானால், Raja என்பது மின்னஞ்சலை உபயோகிப்பவரின் அடையாளமாகும். yahoo.com என்பது மின்னஞ்சல் முகவரியை உருவாக்கித் தருபவரின் அடையாளமாகும்.
மேற்கண்ட முகவரியில் yahoo.com என்னும் வலைதளத்தில் Raja என்பவரின் மின்னஞ்சல் முகவரி அமைந்துள்ளது என்பதை @ (at the rate of) என்பதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?