இந்தியாவில் மென்பொருள் துறையின் எதிர்காலம்
றைச்சாலைகள், தங்கும் விடுதிகள், விமானத்துறை, இரயில்வேத் துறை,முதாலன பல துறைகளில் அவற்றின் செயல்பாடுகளைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்ளலாம்.
இந்தியாவில் கூட இத்துறை நல்லதொரு வளர்ச்சியைக் ஏற்படுத்தி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் மந்த நிலையில் இருப்பது போல் தோன்றினாலும் கூட, நமது பொருளாதாரத்தில் அது ஏற்படுத்திய மாற்றம் மறுக்க முடியாத உண்மை.டைம்ச் ஆஃப் இந்தியா என்ற பத்த்ரிகையில் வந்தக் கட்டுரை பின்வருமாறு கூறுகிறது: மென்பொருள் துறையினால் தான் இந்தியாவின் சுதந்திரமான வாழ்க்கை சாத்தியமானது. 1990 களில் இத்துறை 100 மில்லியன் டாலர்கள் ஏற்றுமதி மற்றும் 5000 ஊழியர்களைக் கொண்டுத் தொடங்கிய இத்துறை தற்பொது அதிவேகமாக வளர்ந்து சுமார் 70 பில்லியன் டாலர்கள் ஏற்றுமதியையும், 2.8 மில்லியன் ஊழியர்களையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது.
மேலும் வளர்ந்து வரும் இந்தியாவின் முதல் இரண்டுத் துறைகளில் மென்பொருள் துறையும் ஒன்று என்று கூறுகிறது. இன்று பலரும் மென்பொருள் துறை வீழ்ச்சி அடைந்து விட்டது என்று அழுகிறார்கள் ஆனால் எதிர்காலம் அதன் கையில் தான். ஒரு மிகப் பெரிய வாயில் அதற்காகவே திறந்துள்ளது. ஏனெனில் இந்தியப் பொருளாதாரம் மேம்பட வன் பொருள், மென் பொருள், மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் அவசியமாக உள்ளது. ஒளிமயமான மென்பொருள் எதிர்காலத்திற்கு பல காரணிகள் உதவி புரிகின்றன.