மாற்று முயற்சியில் மைக்ரோமேக்ஸ்
அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட கைப்பேசிகளை உற்பத்தி செய்வதில் பிரபலமான இந்தியாவை தளமாகக் கொண்டு செயற்படும் மைக்ரோமேக்ஸ் நிறுவனமானது மாற்று முயற்சி ஒன்றில் இறங்கியுள்ளது.
அனைத்து கைப்பேசிகளுக்கும் Android 4.4 Kitkat இயங்குதளத்தினை பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
எனவே கன்வெஸ் தொடரிலுள்ள கைப்பேசிகளை பயன்படுத்துபவர்கள் புதிய இயங்குதளத்தினை அப்டேட் செய்துகொள்ள முடியும். எனினும் இவ்வசதி எப்போது அறிமுகப்படுத்தப்பவுள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை.
Android 4.4 Kitkat இயங்குதளத்தினை நிறுவக்கூடிய கன்வெஸ் ஸமார்ட் கைப்பேசிகள்,
Micromax A110 Canvas 2, Micromax A110Q Canvas 2 Plus, Micromax A111 Canvas Doodle, Micromax A116 Canvas HD, Micromax A117 Canvas Magnus, Micromax A116i Canvas HD, Micromax A210 Canvas 4, Micromax A114 Canvas 2.2, Micromax A240 Canvas Doodle 2 மற்றும் Micromax A250 Canvas Turbo