LG அறிமுகம் செய்யும் வினைத்திறன் வாய்ந்த கைப்பேசி
LG நிறுவனமானது G Pro 2 எனும் வினைத்திறன் கூடிய கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இதன்படி அடுத்த மாதம் இடம்பெறவுள்ள Mobile World Congress கண்காட்சியின்போது அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கைப்பேசியானது 6 அங்குல அளவு,
1920 x 1080 Pixel Resolution கொண்ட தொடுதிரையினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் Quad-Core Qualcomm Snapdragon 800 Processor மற்றும் Adreno 330 GPU என்பனவற்றுடன் பிரதான நினைவகமாக 3GB RAM இனையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் கூகுளின் Android 4.4 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இக்கைப்பேசி வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.