நீரிழிவு நோயாளிகளுக்கு கூகுள் தரும் இனிப்பான செய்தி
பல்வேறு தொழில்நுட்ப புரட்சிகளை ஏற்படுத்தி வரும் கூகுள் நிறுவனம் தற்போது மேலும் ஒரு புதிய முயற்சியில் காலடி வைத்துள்ளது.
பலத்த வரவேற்பைப் பெற்ற கூகுள் கிளாஸ் தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டமாக இருக்கும் இம்முயற்சியானது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கவல்லதாக இருக்கின்றது.
அதாவது நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை மட்டத்தினை துல்லி
யமாக அறிந்துகொள்வதற்காக உருவாக்கப்படும் சாதனமே இதுவாகும்.
Google X எனும் இச்சாதனமானது ஸ்மார்ட் கண்டாக்ட் லென்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றது.
விசேட சென்சார்களை கொண்டுள்ள இச்சாதனத்தில் WiFi வயர்லெஸ் தொழில்நுட்பமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.