விளையாட்டு வீரர்களுக்காக அறிமுகமாகும் அதி நவீன கடிகாரம்

தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியின் காரணமாக கைக்கடிகாரத்திலும் பல்வேறு புரட்சிகள்
இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.
இதன் ஒரு அங்கமாக தற்போது விளையாட்டு வீரர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் அதி நவீன கடிகாரம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Polar V800 Triathlon எனப்படும் இக்கடிகாரத்தின் உதவியுடன் Bluetooth Smart எனும் தொழில்நுட்பத்தின ஊடாக இதயத்துடிப்பு வீதத்தை அறிதல், GPS தொழில்நுட்பத்தின் ஊடாக ஒருவரது செயற்பாட்டு வேகத்தை அறிதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
இவை தவிர 30 மீற்றர் ஆழம் உடைய நீரில் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் இதன் மின்கலம் ஆனது 16 மணித்தியாலங்கள் வரை மின்னை வழங்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
இதன் விலையானது 449 டொலர்கள் ஆகும்.
இதயத்துடிப்பை அறிய முடியாத பதிப்பும் இக்கடிகார வகையில் காணப்படுவதுடன் அதன் விலை 399 டொலர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?