ஸ்டெம்செல்கள் உருவாக்கத்தில் புதிய முன்னேற்றம்! ஆய்வாளர்கள் தகவல்

ஸ்டெம்செல்கள் உருவாக்கத்திற்கான ஆராய்ச்சியில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மனித உடம்பில் பல வகையான அணுக்களின்(செல்) தொகுப்புகள் உள்ளன.
இவைகளில் நரம்பு, தரை, கல்லீ
ரல் என ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட செயல்பாடுகள் உண்டு.
இதில் ஏதேனும் ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால், ஸ்டெம் செல்களை பயன்படுத்துவதன் மூலம் பழுதடைந்த பகுதியை புதுப்பித்துக் கொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இந்த செயல்பாடு பரவலாக கண், இதயம், மூளை சிகிச்சை முறைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், எலிகளின் ரத்த அணுக்களை அமிலத்தில் நனைத்தபோது அவை ஸ்டெம்செல்களாக உருமாறுவதைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஸ்பாட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செல்களின் உற்பத்தி குறித்து ரிகேன் மையத்தில் உள்ள உயிரியல் வளர்ச்சிப் பிரிவில் ஆய்வு செய்துவரும் டாக்டர் ஹருகோ ஒபோகடா, தான் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனதாகத் தெரிவித்தார்.
இதே முறையில் தற்போது மனித ரத்தத்தில் ஸ்டெம்செல்களை உருவாக்க ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை வெற்றி பெறுமேயானால் குறைந்த செலவில் விரைவாகவும், பாதுகாப்பான முறையிலும் ஸ்டெம்செல்களை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?