E Fun அறிமுகம் செய்யும் புத்தம் புதிய Nextbook
தற்போது மொபைல் சாதனங்களுக்கு ஏற்பட்டுவரும் அதிகரித்த வரவேற்பு காரணமாக பல்வேறு நிறுவனங்களும் மொபைல் உற்பத்தியில் களமிறங்கியுள்ளன.
இவற்றின் வரிசையில் E Fun எனும் நிறுவனமும் இணைந்துள்ளது. இந்நிறுவனமானது Nextbook 8 மற்றும் Nextbook 10 எனும் இருவகையான டேப்லட்களை இந்த வ
ருடம் அறிமுகம் செய்யவுள்ளது.
Android 4.2 இயங்குதளத்தினைக் கொண்ட இச்சாதனங்களுள் Nextbook 8 ஆனது 7.85 அங்குல தொடுதிரையினையும் 8GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளதுடன் Nextbook 10 ஆனது 10.1 அங்குல தொடுதிரை, 16GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ளது.
அத்துடன் இரு சாதனங்களும் 1.6GHz வேகத்தில் செயற்படக்கூடிய Cortex A9 Processor, 1GB DDR3 RAM, 2 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 0.3 மெகாபிக்சலை உடைய வீடியோ அழைப்புக்களுக்கான கமெரா ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளது.
Nextbook 8 இன் விலை 129.99 டொலர்களாகவும், Nextbook 10 இன் விலை 149.99 டொலர்களாகவும் காணப்படுகின்றது.