இனிமேல் நிம்மதியாக தூங்க கூட முடியாது? வந்துவிட்டது ரோபோ அலாரம்


ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை படுக்கைக்கு சென்று எழுப்பும் ரோபோ அலாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி அடைய அடைய, நவீன வடிவில் ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தற்போது அலாரம் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ரோபோ அலாரம் வைக்கப்பட்ட நேரத்தில் கீழே இருந்து மேலே குதித்து படுக்கையின் ஓரத்தில் இருக்கும் டேபிளில் உட்காருகிறது.
பின்னர் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்கள் காதருகில் பயங்கர சத்தத்துடன் அலாரம் அடிக்கிறது.
தூங்குபவரின் படுக்கைக்கு வர வசதியாக இந்த ரோபோவில் மூன்று சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அவை 3 அடி உயரம் வரை எழும்பி தாவக்கூடியவை. தூங்குபவர் எழுந்து அதன் சுவிட்சை அணைக்கும் வரை அதாவது ஆப் செய்யும் வரை அலாரம் அடித்துக் கொண்டே இருக்கும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?