குழந்தைகளுக்காக அறிமுகமாகும் புத்தம் புதிய டேப்லட்


குழந்தைகள் இலகுவாக பயன்படுத்தக் கூடிய வகையிலும், விசேட இணையத் தேடுபொறியினைக் கொண்டதுமான புத்தம் புதிய டேப்லட் ஒன்று ஜுலை 16ம் திகதி அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது.
XO டேப்லட் என அழைக்கப்படும் இச்சாதனமானது 7 அங்குல தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 1GB RAM, சேமிப்பு நினைவகமாக 8GB கொள்ளளவு என்பனவற்றினைக் கொண்டுள்ளன.

மேலும் கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இச்சாதனமானது HDMI இணைப்பு, 2 மெகாபிக்சல்கள் உடைய கமெரா போன்றனவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இதன் விலையானது அண்ணளவாக 100 டொலர்கள் அளவில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

BIOS என்றால் என்ன?

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3