Pipo அறிமுகப்படுத்தும் Max M6 டேப்லட் கணனி

சீனாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் Pipo நிறுவனமானது Max M6 டேப்லட் கணனியினை அறிமுகம் செய்துள்ளது.
9.7 அங்குல அளவு மற்றும் 2048 x 1536 Pixel Resolution உடைய Retina தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் ஆனது 1.6GHz வேகத்தில் செயலாற்றவல்ல Quad-Core A9 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.

மேலும் WiFi, Bluetooth, 3G போன்ற வலையமைப்பு தொழில்நுட்பங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த சாதனத்தில் 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெராவும், 2 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெராவும் இணைக்கப்பட்டுள்ளது.தற்போது கூகுளின் Android 4.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இச்சாதனம் விரைவில் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை உடையதாக மேம்படுத்தப்படவிருக்கின்றது.
அத்துடன் இதன் பெறுமதியானது 269 அமெரிக்க டொலர்கள் எனவும், WiFi தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட் 308 அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?