Huawei அறிமுகப்படுத்தும் MediaPad 7 Youth டேப்லட்
கணனி மற்றும் கைப்பேசி உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக திகழும் Huawei ஆனது தனது புத்தம் புதிய வெளியீடான MediaPad 7 Youth தொடர்பில் அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதன்படி 7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட் ஆனது 1.6GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor இனைக் கொண்டுள்ளதுடன் கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குளத்தினை
அடிப்படையாகக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
மேலும் 4100 mAh Li-Polymer மின்கலம், Wi-Fi வயர்லெஸ் தொழில்நுட்பம் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.
அத்துடன் 350 கிராம் எடையும், 9.9 மில்லி மீட்டர்கள் தடிப்பும் உடைய இந்த டேப்லட்டின் பிரதான நினைவகம் உட்பட சில தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.