ஸ்மார்ட் கைபேசி தயாரிப்பில் காலடி பதிக்கின்றது HP
கணனி உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவனமான HP ஆனது தற்போது ஸ்மார்ட் கைப்பேசி தயாரிப்பிலும் காலடி பதிக்கின்றது.
இதன் படி webOS எனும் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை உருவாக்கும் நடவடிக்கைகளை தற்போது இடம்பெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்நிறுவனத்திலி
ருந்து உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
எது எவ்வாறாயினும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்ற கணனி வடிவமைப்பு நிறுவனம் என்பதால் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கும் சிறந்த வரவேற்பு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.