அறிமுகமாகியது புதிய Nexus 7 டேப்லட்
கூகுள் அறிமுகப்படுத்திய நெக்சஸ் டேப்லட்களின் வரிசையில் தற்போது புதிய Nexus 7 டேப்லட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
7 அங்குல அளவு மற்றும் 1980 x 1200 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் ஆனது 1.5GHz வேகத்தில் செயலாற்றவல்ல Qualcomm Snapdragon Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகிவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இச்சாதனமானது 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக 1.2 மெகாபிக்சல்களை உடைய கமெரா போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றுடன் சேமிப்பு நினைவகமாக 16GB மற்றும் 32GB கொள்ளளவு தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.