அதிவேக தரவுப்பரிமாற்றம் கொண்ட SanDisk உருவாக்கம்
தரவுகளைச் சேமிப்பதற்கு பயன்படும் பல்வேறு சேமிப்பு சாதனங்களில் மிகவும் இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக SanDisk காணப்படுகின்றது.
தற்போது முன்பு காணப்பட்ட SanDisk இனை விடவும் இரு மடங்கு வேகமாக தரவுகளை பரிமாற்றம் செய்யக்கூடிய SanDisk உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Extreme Micro-SDXC எனப்படும் இந்த நவீன SanDisk ஆனது 80MB/s எனும் வேகத்தில் தரவுகளை பரிமாற்றம் செய்யக்கூடியவையாக காணப்படுகின்றன.
மேலும் 16GB இருந்து 64GB வரையான கொள்ளளவுடையதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சேமிப்பு சாதனத்தின் விலையானது 59.99 டொலர்களிலிருந்து 199 டொலர்கள் வரை அமைந்துள்ளது.