ஒரே கிளிக்கில் கணனியின் செயற்திறனை அதிகரிப்பதற்கு
இன்றைய கால காட்டத்தில் கணனியின் பங்களிப்பு இல்லாத வேலைகள் இல்லை என்றே கூறலாம்.
இதன்படி ஒரே கணனியினைப் பயன்படுத்தி பல்வேறு வகையான வேலைகளை செய்யும்போது அவற்றில் தேங்கும் தற்காலிக கோப்புக்கள், மென்பொருட் கோப்புக்களில் ஏற்படும் வழுக்கள் போன்றவற்றினால் காலப்போக்கில் கணனியின் செயற்திறன் குறைந்து கொண்டே செல்லும்.
இவ்வாறான பிழைகளை சரிசெய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றில் Cloud System
Booster எனும் மென்பொருள் புதிதாக இணைந்துள்ளது.
இம்மென்பொருள் தற்காலிகமாக சேமிக்கப்பட்டிருக்கும் கோப்புக்களை முற்றாக நீக்குவதுடன், நிறுவப்பட்டுள்ள மென்பொருட்கள் தொடர்பான கோப்புக்களில் காணப்படும் வழுக்களையும் நிவர்த்தி செய்கின்றது.
இதனால் கணனி வேகமாக செயற்படக்கூடியதாக இருப்பதுடன், சிறந்த பரிமாரிப்பை உடையதாகவும் காணப்படும்.