உங்கள் தளத்தை இணையத்தள திருட்டில் இருந்து பாதுகாப்பது எப்படி?

இன்று உங்கள் இணையத்தளத்தை அல்லது வலைப்பக்கத்தை வேறு ஒரு தளம் முழுமையாக பயன்படுத்துவதை எப்படி தடுக்கலாம் என்பதை பார்ப்போம். உதாரணமாக, பிரபல்யமான பல இணையத்தளங்களில் வேறு பல இணையத்தளங்களை தமது தளத்தில் iframe மூலமாக இணைத்து பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறான iframe களில் உங்கள் தளம் சிக்காமல் பாதுகாப்பது எப்படி என்பதை காணலாம்.முதலில் iframe என்றால் என்ன என்பதை பார்ப்போம். iframe என்பது ஒரு தளத்தில் இன்னோர் தளத்தை முழுமையாகவோ பகுதியாகவோ இணைத்து பயன்படுத்த உதவும் ஒரு தொழில் நுட்பமாகும்.

iframe இன் தீமைகள்! உதாரணமாக ஒரே தளத்தில் பல தளங்கள் இணைக்கப்படும் போது, அந்த தளத்திற்கு சென்றால் அனைத்து தளங்களையும் பார்க்க முடியும் என்ற மன நிலை பாவணையாளர்களிடம் தோற்றுவிக்கப்படும். இதனால் ஏனைய தளங்களுக்கான நேரடி பாவணையாளர்கள் குறைவார்கள்.

உங்கள் தளத்தில் தங்கி நிப்போரின் நேரம் பங்கிடப்பட்டுவிடும். ( இப்போது Facebook தளத்தில் நீங்கள் Youtube Video வை பகிர்ந்தால்… அது தொடுப்பாக மட்டுமே பகிரப்படும். முன்பு போல் Facebook இலேயே நீங்கள் Video வை பார்க்க முடியாது! காரணம் தள வருகையை அதிகரிக்கவே!)

தடுப்பு முறை : கீழுள்ள Java Script ஐ உங்கள் தளத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இணைக்கவேண்டும்! (உங்கள் தளத்தின் Header அல்லது footer அனைத்து பக்கங்களுக்கும் பொதுவானது என்றால்… Header இல் இக்கு கீழே இவ் நிரலை இணைத்தால் போதும்!)
<script type=”text/javascript”>
<!–
if (top.location!= self.location) {
top.location = self.location.href
 }
//–>
</script>
இனி உங்கள் வலைத்தளத்தை யாருமே தங்கள் தளத்தில் iframe ஆக இணைக்க முடியாது! இணைத்தாலும் iframe இற்குள் கட்டுப்படாது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?