Xiaomi Mi2S அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்
4.3 அங்குல அளவு மற்றும் 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதாகவும் 1.7GHz வேகத்தில் செயலாற்றவல்ல Quad Core Qualcomm Snapdragon 600 Processor - இனைக் உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியின் பிரதான நினைவகமாக 2GB RAM காணப்படுகின்றது.
மேலும் கூகுளின் Android 4.1 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் 13 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்கள் உடைய துணைக் கமெரா போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ள இக்கைப்பேசிகளின் விலையானது 370 டொலர்களாகும்.