PDF கோப்புக்களை JPG கோப்புக்களாக மாற்றுவதற்கு உதவும் மென்பொருள்
பாதுகாப்பு மிகுந்ததும் பாவனைக்கு இலகுவானதாகவும் கருதப்படும் PDF கோப்புக்களை புகைப்படக் கோப்பு வகையான JPG - இற்கு மாற்றுவதற்கு PDF Converter எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளின் உதவியுடன் விரைவாகவும் உயர் தரத்திலும் கோப்பு வகை மாற்றத்தினை மேற்கொள்ளக்கூடியதாகக் காணப்படுவதுடன் பக்க வரையறை அற்றதாகவும் காணப்படுகின்றது.
மேலும் இம்மென்பொருளின் மூலம் 100 இருந்து 600 DPI வரையான அளவுப் பரிமாணங்களை உடைய கோப்புக்களையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.