சம்சுங் அறிமுகப்படுத்தும் Galaxy Xcover 2 கைப்பேசிகள்

சம்சுங் நிறுவனமானது ஏனைய கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களை விடவும் முந்திக்கொண்டு பல புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக தற்போது Samsung Galaxy Xcover 2 எனும் தனது புதிய உற்பத்தியை அந்நிறுவனம் அறிமுகம் செய்து வைத்துள்ளது.
இது கூகுளின் 4.1.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் 4 அங்குல அளவுடைய LCD தொடுதிரைகளை உடையதாகவும் 1GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது
மேலும் இவற்றில் 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா உட்பட வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்காக VGA கமெரா ஒன்றும் காணப்படுகின்றது. இவற்றின் சேமிப்பு நினைவகமானது 4GB ஆக அமைந்துள்ளதுடன் microSD கார்ட்களின் உதவியுடன் இக்கொள்ளளவை அதிகரித்துக் கொள்ளக் கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.
இக்கைப்பேசியின் பெறுமதியானது 270 யூரோக்கள் ஆகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?