அறிமுகமாகியது HTC First ஸமார்ட் கைப்பேசி

தாய்வானைத் தளமாகக் கொண்டு இயங்கும் HTC இலத்திரனியல் உற்பத்தி நிறுவுனமானது HTC First எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 4.3 அங்குல அளவுடையதும் 1280 x 720 Pixel Resolution கொண்டதுமான தொடுதிரையினை கொண்டுள்ளது.
இவற்றுடன் Dual Core Qualcomm Snapdragon 400 processor, 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, 1.6 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகிவற்றினையும் கொண்டுள்ளது.
மேலும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பேஸ்புக் ஹோம் வசதியினையும் கொண்டுள்ள இக்கைப்பேசியின் பெறுமதியானது 99 அமெரிக்க டொலர்களாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?