விரைவில் அறிமுகமாகின்றது LG Lucid 2 கைப்பேசி
கைப்பேசி உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ள LG நிறுவனமாது Lucid 2 எனும் கைப்பேசி உற்பத்தி தொடர்பான அறிவித்தலை கடந்த வருடம் வெளியிட்டிருந்தது.
இந்திலையில் எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி குறித்த கைப்பேசி விற்பனைக்கு வருகின்றது.
அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Dual-Core Qualcomm Snapdragon Processor, 1.3 மெகாபிக்சல் உடைய வீடியோ
அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2460mAh Silicon Oxide மின்கலம் ஆகிவற்றைக் கொண்டுள்ளன.
மேலும் இதன் திரையானது 4.3 அங்குல அளவு மற்றும் 540 x 960 Pixel Resolution உடையதாகவும் தொடுகை முறையிலான செயற்பாடுகளை கொண்டதாகவும் அமைந்துள்ளது.