சம்சுங் அறிமுகப்படுத்தும் Galaxy Tab 3 (7.0) டேப்லட்கள்

சம்சுங் நிறுவனமானது Galaxy Tab 3 (7.0) எனும் தனது புதிய டேப்லட்கள் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த டேப்லட்கள் 1024 x 600 Pixel Resolution உடையதும் 7 அங்குல அளவுடையதுமான WSVGA தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor - இனையும் கொண்டுள்ளன.

மேலும் கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையகாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இவற்றில் 3 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, 1.3 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ சட்டிங்கிற்கான கமெரா ஆகியனவும் காணப்படுகின்றன.
மேலும் பிரதான நினைவகமாக 1GB RAM காணப்படுவதுடன் சேமிப்பு நினைவகமாக 8GB மற்றும் 16GB காணப்படுகின்றது. எனினும் இச்சேமிப்புக் கொள்ளளவினை microSD கார்ட்களின் உதவியுடன் 64GB வரை அதிகரிக்க முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?