Asus அறிமுகப்படுத்தும் Fonepad டேப்லட்கள்
கணனிச் சாதனங்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் திகழும் நிறுவனங்களில் ஒன்றான Asus ஆனது Fonepad எனும் தனது புதிய சாதனத்தை ஏப்ரல் 26ம் திகதி அறிமுகப்படுத்துகின்றது.
7 அங்குல அளவு மற்றும் 1280 x 800 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
மேலும் Intel Atom Z420 Processor, 1GB பிரதான நினைவகம், போன்றனவற்றினையும் 8GB, 16GB சேமிப்பு வசதிகளைக் கொண்ட இருபதிப்புக்களாக வெளிவரவுள்ளது.
இவற்றுடன் 3 மெகாபிக்சல்கள், 1.2 மெகாபிக்சல்கள் உடைய கமெராக்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இச்சாதனத்தின் பெறுமதியானது 180 யூரோக்கள் ஆகும்.