LG அறிமுகப்படுத்தும் Optimus F5 கைப்பேசிகள்
கொரியாவை தளமாகக் கொண்டு இயங்கும் LG நிறுவனமானது Optimus F5 என்ற புத்தம் புதிய கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
4G LTE வலையமைப்பு தொழில்நுட்பத்தினைக் கொண்ட இக்கைப்பேசிகள் 4.3 அங்குல அளவும் 256ppi Resolution உடைய HD தொடுதிரையினை உள்ளடக்கியுள்ளதுடன் 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Qualcomm Snapdragon Processor, 1GB RAM, 2150mAh மின்கலம் ஆகியவற்றினையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் கூகுளின் Android 4.1.2 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட செயற்படவல்ல இக்கைப்பேசிகளில் 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா, 1.3 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் காணப்படுவதுடன் சேமிப்பு நினைவகமானது 8GB ஆகவும் அமைந்துள்ளது.
இவற்றின் விலையானது 445 டொலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.