Toshiba அறிமுகப்படுத்தும் KIRAbook Ultrabook கணினிகள்
முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் Toshiba நிறுவனமானது தனது புதிய உற்பத்தியான KIRAbook Ultrabook மடிக்கணனிகளை அறிமுகப்படுத்துகின்றது.
13.3 அங்குல அளவுடையதும் 2560 x 1440 Pixel Resolution உடையதுமான திரையைக் கொண்டுள்ள இக்கணனிகள் Core i5 மற்றும் i7 Processor களை கொண்ட இரு வேறு பதிப்புக்களாகவும் பிரதான நினைவகமாக 8 GB RAM ஆகியவற்றையும் கொண்டுள்ளதோடு சேமிப்பு நினைவகமாக 256 GB காணப்படுகின்றது.
2.6 பவுண்ட்ஸ் எடை கொண்ட இம்மடிக்கணினியின் பெறுமதியானது 1599.99 டொலரிலிருந்து 1999.99 டொலர் வரையாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.