அதிநவீன அன்ரோயிட் டேப்லட் அறிமுகம்

அதிநவீன டேப்லட் ஒன்றினை இலத்திரனியல் சாதனகளை உற்பத்தி செய்யும் நிறுவனமான Pipo அறிமுகப்படுத்தியுள்ளது.
இது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Pipo M8pro எனும் இந்த டேப்லட் ஆனது 9.4 அங்குல அளவுடையதும், 1280 x 800 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் Quad Core Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.
மேலும் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினையும், 16GB சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளதுடன் குறித்த சேமிப்பு வசதியினை MicroSD கார்ட்களின் உதவியுடன் தேவைக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளவும் முடியும்.
இவற்றுடன் 5 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களுக்கான கமெரா போன்றவற்றினையும் கொண்டுள்ள இச்சாதனத்தின் பெறுமதியானது 229 அமெரிக்க டொலர்களாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?