iOS சாதனங்களுக்கான கூகுள் குரோம் உலாவியின் புதிய பதிப்பு வெளியானது
அப்பிளின் தயாரிப்பான iOS இயங்குதளங்களைக் கொண்டு செயற்படும் iPhone மற்றும் iPad போன்ற சாதனங்களுக்காக கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு முதற்தர உலாவியாகத் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்புதிய பதிப்பானது Google Cloud Print மற்றும் Air Print சேவைகளுக்கு இயைபாக்கம் உடையதாகக் காணப்படுவதுடன் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நிவர்த்தி செய்யப்பட்டும் உள்ளன.
தவிர Chrome 26 எனும் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ள இதில் முழுத்திரை வசதி மற்றும் சிறந்த செயற்பாடு என்பன காணப்படுகின்றன. இப்புதிய பதிப்பினை அப்பிளின் iTunes App Store தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும்.