Acer அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய விண்டோஸ் 8 டேப்லட்
முன்னணி கணனிச் சாதனங்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தும் நிறுவனங்களுள் ஒன்றான Acer ஆனது Acer W3-810 எனும் புத்தம் புதிய விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது.8 அங்குல அளவு மற்றும்
1280×800 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இச்சாதனமானது 1.8GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Intel Atom Processor - இனையும் உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.
இவை தவிர பிரத்தியேகமான விசைப்பலகையுடன் அறிமுகமாகவிருக்கின்ற இந்த டேப்லட்டின் விலை தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.