Asus அறிமுகப்படுத்தும் Transformer AiO P1801 ஹைப்றிட் கணனி
முன்னணி கணனி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் Asus நிறுவனமானது டேப்லட் மற்றும் டெக்ஸ்டாப் கணனிகளை ஒன்றாக கொண்ட Transformer AiO P1801 ஹைப்றிட் (Hybrid) நவீன கணனிச் சாதனத்தை அறிமுகப்படுத்துகின்றது
.
.
இவற்றில் மல்டி டச் தொழில்நுட்பத்தினைக் கொண்ட 18.4 அங்குல அளவுடைய HD தொடுதிரை காணப்படுவதுடன் 3.1 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Intel Core i5 Processor, பிரதான நினைவகமாக 8GB RAM ஆகியனவும் காணப்படுகின்றன.
1,299 அமெரிக்க டொலர்கள் பெறுமதியுடைய இச்சாதனத்தில் 2GB கொள்ளளவுடைய nVidia GeForce 730M கிராபிக்ஸ் மெமரியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.