iOS சாதனங்களுக்கான Google+ அப்பிளிக்கேஷன் அறிமுகம்
முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாக திகழும் கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட Google+ சேவையினை iPhone மற்றும் iPad போன்ற iOS சாதனங்களில் பெற்றுக்கொள்வதற்காக புதிய அப்பிளிக்கேஷன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
48 நாடுகளை புதிதாக உள்ளடக்கியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் ஆனது 2012ம் ஆண்டின் வெளியிடப்படவிருந்த போதிலும் தற்போதே வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மற்றொரு சமூக இணையத்தளமான பேஸ்புக் Graph Search எனும் புதிய வசதியினை அறிமுகப்படுத்திய சில நாட்களிலேயே Google+ இந்த அப்பிளிக்கேஷனை வெளியிட்டுள்ளது.