யூடியூப்பில் புகைப்படங்களை தரவேற்றம் செய்ய

வீடியோ என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருபவற்றில் முதன்மையானது கூகுள் நிறுவனத்தின் யூடியூப் தளம் தான்.
இத்தளத்திற்கு தற்போது மாதம் நூறு கோடி பயனாளர்கள் வருகை தருகிறார்கள்.
வீடியோக்களை பகிர உதவும் யூடியூப் தளத்தில் புகைப்படங்களை பகிரலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. நமது புகைப்படங்களை Slideshow வீடியோவாக பகிரும் வசதியை யூடியூப் தருகிறது.

யூடியூப்பில் புகைப்படங்களை தரவேற்றம் செய்யும் வழிமுறைகள்
1. யூடியூப்பில் வீடியோவை அப்லோட் செய்யும் பகுதிக்கு செல்லுங்கள்.
2. அங்கு வலது புறம் Photo Slideshow என்று இருக்கும். அதன் கீழுள்ள Create என்பதை க்ளிக் செய்யுங்கள்.
3. உங்கள் புகைப்படங்களை அப்லோட் செய்யுங்கள்.
4. புகைப்படங்களை வரிசைப்படுத்துங்கள்.
5. முன்னோட்ட வீடியோவுக்கு கீழ் உள்ள அமைவுகளை உங்கள் விருப்பம் போல் மாற்றிக் கொள்ளுங்கள்.
6. விருப்பமிருந்தால் ஓடியோக்களை இலவசமாக இணைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் யூடியூப்பில் விளம்பரம் பெற்றிருந்தால் ஓடியோ சேர்க்க வேண்டாம். சேர்த்தால் அந்த வீடியோக்கான வருமானம் உங்களுக்கு வராது.
7. வீடியோ விவரங்களைக் கொடுத்து Publish கொடுங்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem