பயனர்களுக்காக Google+ தரும் புத்தம் புதிய வசதி
பேஸ்புக் சமூகவலைத்தளத்திற்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட Google+ சமூக வலைத்தளமானது தற்போது அதிகளவான பயனர்களை
தன்னகத்தே கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது.
தன்னகத்தே கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது.
இந்நிலையில் மேலும் பயனர்களை தன்னகத்தே கவரும் விதமாகவும், தற்போதுள்ள பயனர்களுக்கான புதிய வசதியை வழங்கும் முகமாகவும் அனிமேஷன் கோப்புக்களை Profile Picture ஆக பயன்படுத்தக்கூடிய வசதியை Google+ அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வசதியானது டெக்ஸ்டாப் கணினிகள் உட்பட மொபைல் சாதனங்களிலும் செயற்படக்கூடியதாகக் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும். எனினும் தற்போது அப்பிளின் iOS சாதனங்களில் செயற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக கூகுள் எந்திரவியலாளரான Matt Steiner என்பவர் தனது Google+ பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலை படத்தில் காணலாம்.