பேஸ்புக்கில் பேஜ் ஒன்றில் Threaded Comment வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு


முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் உருவாக்கக்கூடியதாகக் காணப்படும் பேஜ் அம்சத்தில் திரிபுற்ற கருத்துக்களை (Threaded Comment) தெரிவிக்கும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் பேஸ்புக் பேஜ் ஒன்றில் பகிரப்படும் போஸ்ட் ஒன்றிற்கு தெரிவிக்கப்படும் கருத்துரைகளுக்கு நேரடியாகவே அதன் கீழ் பதில்
(Reply) தர முடியும்.
இப்புதிய வசதியானது தற்போது வரையறுக்கப்பட்ட பேஸ்புக் பேஜ்களிற்கே கொடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜுலை 10ம் திகதிக்கு பின்னர் செயற்படுத்த முடியாததாகவும் காணப்படுகின்றது.
இதேவேளை 10,000 மேற்பட்ட லைக் எண்ணிக்கையைக் கொண்ட பேஜ்களிற்கு இவ்வசதி சுயமாகவே செயற்படுத்தப்படுவதுடன் ஏனைய பேஜ்களிற்கு சில மாற்றங்களை மேற்கொள்ளவதனூடாக செயற்படுத்தக்கூடியவாறு காணப்படுகின்றது.
அவ்வாறு செயற்படுத்துவதற்கு பேஸ்புக் தளத்தினுள் உள்நுளைந்து குறித்த பேஜ் பகுதிக்கு செல்லவும், அங்கு Edit page என்பதை கிளிக் செய்து தோன்றும் மெனுவில் Manage Permissions என்பதை தெரிவு செய்யவும்.
அதன் பின்னர் தோன்றும் படிவத்தில் Replies என்பதை தெரிவு செய்து Save changes பொத்தானை அழுத்தவும். இப்போது அப்பக்கத்திற்கான திரிபுற்ற கருத்துக்களை தெரிவிக்கும் வசதி வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டிருக்கும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?