பதிவுகளை ஒரே கிளிக்கில் அனைத்து பேஸ்புக் குரூப்களிலும் அப்டேட் செய்ய


பேஸ்புக்கில் க்ரூப் என்ற வசதி உள்ளது அனைவருக்கும் தெரியும். பேஸ்புக் க்ரூப்பில் நம் பதிவுகளை பகிர்ந்தால் அந்த அந்த குழுவில் சேர்ந்துள்ள அனைவருக்கும் சென்றடையும் ஆதலால் உங்கள் பிளாக்கின் வாசகர் வரத்து அதிகரிக்கிறது. பேஸ்புக்கில் ஏராளமான பேஸ்புக் குழுக்களில் நீங்கள் சேர்ந்து இருக்கலாம். அதனால் ஒவ்வொரு முறை போஸ்ட் போட்ட பிறகு ஒவ்வொரு க்ரோப்பாக அனைத்து குழுவிற்கும் சென்று உங்கள் பதிவினை அப்டேட் செய்ய வேண்டும். நான் சுமார் 20 க்ரூப்களில் சேர்ந்து உள்ளதால் 20 குழுவிற்கும் சென்று என்னுடைய போஸ்ட்டை அப்டேட் செய்ய வேண்டும். இனி அந்த பிரச்சினை இல்லை ஒரே கிளிக்கில் அனைத்து பேஸ்புக் க்ரூப்களிலும் சுலபமாக அப்டேட் செய்து விடலாம். 

இதற்க்கு Multiple Post என்ற பேஸ்புக் அப்ளிகேஷன் பயன்படுகிறது. முதலில் Multiple Post இந்த லிங்கில் செல்லவும் அங்கு உள்ள Connect என்ற பட்டனை அழுத்தி இந்த அப்ளிகேஷனுக்கு பெர்மிசன் கொடுக்கவும். 




அடுத்து உங்களுக்கு இன்னொரு பக்கம் ஓபன் ஆகும் அதில் நீங்க பகிர வேண்டிய பதிவின் URL, இமேஜ், போன்ற விவரங்களை கொடுக்கவும். அடுத்து நீங்கள் பகிர வேண்டிய பேஸ்புக் குரூப்களை தேர்வு செய்து கொள்ளவும். (தமிழ் எழுத்துக்களுக்கு சப்போர்ட் செய்யாததால் தமிழ் க்ரூப்களை தேர்வு செய்வதில் சற்று சிரமம் இருக்கும். ஆனால் இது பழக பழக பழக சரியாவிடும்). 



பகிரவேண்டிய குரூப்களை தெரு செய்தவுடன் கீழே உள்ள POST என்ற பட்டனை அழுத்தி உங்கள் பதிவை பகிர்ந்து விடவும். அவ்வளவுதான் நீங்கள் தேர்வு செய்ய அனைத்து பேஸ்புக் குரூப்களிலும் உங்களின் பதிவுகள் பகிரப்பட்டு விடும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem