அன்ரோயிட் சாதனங்களுக்கான TeamViewer மென்பொருளிள் புதிய பதிப்பு அறிமுகம்

கணனிகளை தொலைவிலிருந்து இயக்குவதற்கு பயன்படும் மென்பொருட்களில் பிரபல்யமானது TeamViewer ஆகும்.
இம்மென்பொருளானது விண்டோஸ், அன்ரோயிட், மற்றும் அப்பிளின் iOS இயங்குதளங்களில் செயற்படக்கூடியாவாறு காணப்படுகின்றது.
இம்மென்பொருளானது தற்போது அன்ரோயிட் சாதனங்களுக்காக மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்பான TeamViewer 8.0.1017 ஆக வெளியிடப்பட்டுள்ளது.
இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்பில் உள்ளடக்கப்படாத சில புதிய அம்சங்கள் தரப்பட்டுள்ளதோடு முன்னைய பதிப்புக்களில் காணப்பட்ட சிறு சிறு தவறுகளும் நீக்கப்பட்டுள்ளன.
இதன்படி அன்ரோயிட் டேப்லட்களில் தொடுகை வசதியுடன் பயன்படுத்தக்கூடியவாறு மேம்படுத்தப்பட்டுள்ள இப்புதிய பதிப்பினை விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட டேப்லட்களிலும் பயன்படுத்த முடியும்.
தவிர குறித்த மென்பொருள் தொடர்பான வழிகாட்டல்களிலும் பல்வேறு புதிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தரவிறக்கச் சுட்டி
view video  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?