HP அறிமுகப்படுத்தும் Slate 7 அன்ரோயிட் laptops
computer உற்பத்தியில் முதலில் திகழும் நிறுவனங்களுள் ஒன்றான HP ஆனது googleன் ஆன்றொஇட் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய Slate 7 எனும் புத்தம் புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்துள்ளது.
1024 x 600 Pixel Resolution மற்றும் 7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள Slate 7 டேப்லட் ஆனது Cortex A9 Dual Core Processor, பிரதான நினைவகமாக 1GB RAM என்பனவற்றுடன் 8GB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.
மேலும் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இந்த டேப்லட் ஆனது 3 மப் உடைய கமெரா ஒன்றினையும், வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென VGA கேமரா ஒன்றினையும் கொண்டதாகக் காணப்படுகின்றது.
அத்துடன் இதன் விலையானது $ 170 ஆக அமைந்துள்ளது.