உங்களை கேலிச்சித்திர நாயகனாக்கும் ஃபேஸ்புக் அப்ளிக்கேஷன்
சமூக வலைத்தளங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஃபேஸ்புக் தளத்தில் பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.
ஃபேஸ்புக்கில் இருக்கும் அப்ளிகேசன்களில் பல மிகவும் பிரபலமாகியுள்ளது.
கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) படங்களை வடிவமைப்பதற்காகவே ஒரு சிறப்பான அப்ளிகேசன் உள்ளது.பிட்ஸ்ட்ரிப்ஸ் என்ற இந்த அப்ளிகேசன் மிகவும் பிரபலமாகியும் உள்ளது.
இதை எப்படி பயன்படுத்துவது என்ற விவரங்களைத்தான் கீழே பார்க்கலாம். கேலிச்சித்திரங்களாக மட்டுமல்லாது, வாழ்த்து அட்டைகள் (Greeting Card) கூட இத்தளத்தில் கிடைக்கிறது.
கீழே உள்ள இணையதள முகவரியை செல்லவும். பின்னர் அதில் உள்ள அவதார் டிசைன் செய்யவும் என்ற பொத்தானை அழுத்தி அடுத்த பக்கத்திற்கு செல்லவும். இவை அனைத்தும் ஆண்கள்/பெண்கள் பொறுத்து மாறுபடும்.
அடுத்ததாக வரும் பக்கங்களில் உங்கள் முக அமைப்பு எப்படியிருக்கும் என்ற கேள்விகளுக்கு, படங்கள் மூலமே பதிலளிக்கவும். உதாரணத்திற்கு, உங்கள் முகத்தின் கலர் மற்றும் வடிவமைப்பு போன்றவை.
இங்கே நீங்கள் உயரமானவரா அல்லது உயரம் குறைந்தவரா என்பதை தெளிவாக குறிப்பிடவும். அதைப்பொருத்தே உங்களுடைய கேலிச்சித்திரம் அமையும்.
நீங்கள் எடை குறைந்தவரா அல்லது உடல் எடை அதிகம் உடையவரா என்பதை இந்தப்பகுதியில் குறிப்பிடலாம்.
நீங்கள் உடையணியும் முறையைக்கூட இங்கே குறிப்பிடலாம். அனைத்து செயல்களும் முடிந்தவுடன் உங்களுடைய கார்ட்டூன் மற்றும் அதுதொடர்பான பல படங்களை தானாகவே வடிவமைக்கும் இந்த அப்ளிகேசன். பயன்படுத்துவதற்கு நன்றாக இருக்கும்.