பாதுகாப்பான கடவுச்சொல் (Password) எளிதாக ஆன்லைன் மூலம் உருவாக்கலாம்


சாதாரண பயனாளர் கணக்கு முதல் பேங்க் ஆன்லைன் அக்கவுண்ட்
வரை அனைத்திற்கும் பயன்படுத்தும் கடவுச்சொல் ( Password) எப்படி
பாதுகாப்பாக அமைப்பது என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.


படம் 1
கணினியில் உள்செல்ல நாம் பயன்படுத்தும் (Password) முதல்
இமெயில் பயன்படுத்தும் கடவுச்சொல் வரை அனைத்தும் பாதுகாப்பாக
இருப்பது மிக முக்கியம் ஆனால் கடவுச்சொல்லுக்கு நாம்
பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை இந்தக்குறையை
நீக்கி நமக்கு மிக பாதுகாப்பான கடவுச்சொல் வைப்பதற்கு
உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
படம் 2
இணையதள முகவரி : http://www.safepasswd.com
இந்ததளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Type என்பதில் நமக்கு
பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்த பின் New Password என்ற
பொத்தானை சொடுக்கவும் அடுத்து வரும் திரையில் பாதுகாப்பான
கடவுச்சொல் நமக்கு கிடைக்கும். இதைத்தான் பயன்படுத்த வேண்டும்
என்பதில்லை இதில் இருப்பது போல் நாம் விருப்பப்படி கடவுச்சொல்
அமைத்துக்கொள்ளலாம். கடவுச்சொல் மேல் முக்கியத்துவம்
கொடுக்கும் அனைவருக்கும் இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?