கணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினியில் சரியாக மென்பொருள்களை நிறுவி பயன்படுத்த மாட்டார்கள். பெரும்பாலும் ஒன்றுக்கும் அதிகமான வீடியோ மற்றும் ஆடியோ பிளேயர், மற்றும் உலாவிகளை நிறுவி இருப்பார்கள் தவிர அவசியமான இன்னும் பிற மென்பொருள்களும் கணினிக்கு கட்டாயம் தேவை. விண்டோஸ் இயங்குதளத்தை கணினியில் நிறுவி விடுவோம். பின் ஆண்டிவைரஸ் நிறுவுவோம். பின் தேவையான ட்ரைவர் நிறுவுவோம். இன்னும் ஒருசில மென்பொருள்களை நிறுவிவிட்டு அப்படியே விட்டுவிடுவோம். ஒரு இரண்டு மாதங்களுக்கு பிறகு கணினியானது மந்தமாக செயல்படும் இதற்கு காரணம். அவ்வப்போது தற்காலிகமாக தங்கும் கோப்புகளை நீக்கம் செய்யாதது. முறையாக மென்பொருள் நிறுவாமை போன்ற பல காரணங்கள் ஆகும். விண்டோஸ் இயங்குதளத்தை பொறுத்தவரை கட்டாயமாக 25 மென்பொருள்கள் இருத்தல் அவசியம் ஆகும். அவை எவையென்று பார்ப்போம். 1.சிறந்த ஆண்டிவைரஸ் விண்டோஸ் இயங்குதளத்தில் கட்டாயம் ஆண்டிவைரஸ் மென்பொருள் தேவை, ஆண்டிவைரஸ் இல்லையெனில் வைரஸ் நம் கணினியில் புகுந்து அனைத்து கோப்புகளையு...