Windows 8.1 இயங்குதளம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அறிமுகம்
உலகின் முதற்தர இயங்குதள வடிவமைப்பு நிறுவனமான மைக்ரோசொப்ட் கடந்த வருடம் Windows 8 எனும் இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது.
தொடுதிரைத் தொழில்நுட்பசாதனங்களில் இலகுவாக
பயன்படுத்தக்கூடியதாக உருவாக்கப்பட்ட இந்த இயங்குதளம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த இயங்குதளத்தின் புதிய பதிப்பான Windows 8.1 இயங்குதளத்தினை வடிவமைக்கும் முயற்சியில் முழு மூச்சாக செயற்பட்டு வந்த மைக்ரோசொப்ட் சில மாதங்களுக்கு முன்னர் பீட்டா பதிப்பினை வெளியிட்டிருந்தது.
தற்போது இதன் முழுமையான பதிப்பினை மக்களின் பாவனைக்காக எதிர்வரும் ஒக்டோபர் 17ம் திகதி வெளியிடப்போவதாக அந்நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.