அறிமுகமாகவிருக்கும் iPad 5 தொடர்பான தகவல்கள்
அப்பிள் நிறுவனத்தயாரிப்புக்களில் ஒன்றான iPad சாதனத்தின் ஐந்தாம் தலைமுறைக்குரிய புதிய சாதனம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
iPad 5 எனுப்படும் இச்சாதனத்திற்கு பயன்படுத்தப்படவுள்ள வெளி உறை (Case) தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில் புதிதாக வரவிருக்கும் iPad 5 ஆனது மிகவும் மெலிதானதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது வெளி உறையின் அளவுப்பரிமாணம் ஆனது 340 மில்லி மீற்றர் நீளம், 168 மில்லி மீற்றர் அகலம், 7.9 மில்லி மீற்றர் தடிப்பு உடையதாகக் காணப்படுகின்றது.