Wi-Fi தொழில்நுட்பத்துடன் Canon அறிமுகப்படுத்தும் வீடியோ கமெரா

இலத்திரனியல் சாதன உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட Canon நிறுவனம் ஆனது Wi-Fi வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோ கமெரா ஒன்றினை அறிமுகப்படுத்துகின்றது.
Vixia எனும் பெயருடன் அறிமுகமாகும் இச்சாதனமானது 3 x 0.9 x 3.8 அங்குல அளவு பரிமாணத்தை உடையதாகக் காணப்படுகின்றது.
மேலும் 12.8 மெகாபிக்சல்களை கொண்ட இக்கமெராவில் 2.8 அங்குல அளவுடைய LC
D திரையும் பொருத்தப்பட்டுள்ளது.
இதனுடன் இணைக்கப்பட்டுள்ள 760 mAh மின்கலத்தின் உதவியுடன் தொடர்ச்சியாக 45 நிமிடங்கள் வீடியோ பதிவு செய்யக்கூடியதாக காணப்படுகின்றது.
இக்கமெராவின் பெறுமதி 299.99 அமெரிக்க டொலர்களாகும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?