உலகின் மிகப்பிரம்மாண்டமான ஒன்லைன் சொப்பிங் சேவையை வழங்கிவரும் அமேசான் தளமானது தற்போது புதிய சேவையினை அறிமுகப்படுத்துகின்றது. இதன்படி வாடிக்கையாளர்கள் தரவிறக்கம் செய்யக்கூடிய வகையிலோ அல்லது கொள்வனவு செய்யக்கூடிய வகையிலோ மென்பொருட்கள் மற்றும் வீடியோ கேம்களை வழங்கவுள்ளது. புதிதாக வெளியாகும் மென்பொருட்கள், கேம்களை இதனூடு பெற்றுக்கொள்ள முடிவதுடன், 10GB கொள்ளளவுக்கு அண்மையான அல்லது அதற்கு மேற்பட்ட கோப்பு அளவுகளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரித்தானியாவில் அறிமுகமாகும் இச்சேவையானது விரைவில் ஏனைய நாடுகளிலும் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Wacom நிறுவனமானது புதிதாக வடிவமைக்கப்பட்ட டேப்லட் ஒன்றினை இம்மாதம் 20ம் திகதி வெளியிடவிருக்கின்றது.
Stand Alone சாதனமாக பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இச்சாதனத்தை முதன் முறையாக குறைந்த விலையில் வழங்குவதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி 200 டொலர்களாக அதன் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் குறித்த டேப்லட் தொடர்பான ஏனைய விபரங்களை இதுவரை வெளியிடாத குறித்த நிறுவனம், டேப்லட்டின் சில சிறப்பம்சங்களை வெளிப்படுத்தக்கூடிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?